search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் குதித்து தற்கொலை"

    ஊத்துமலை அருகே மூலநோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 31). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மூலநோய் வந்ததால் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என்றதால், அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறினார். 

    இதில் மனம் உடைந்த அவர் கடந்த 15-ந் தேதி காற்றாலை மின்நிலையத்தில் மின்வயரை பிடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித் தனர். அங்கு வெங்கடேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் வெங்கடேஷ்சின் முகத்தின் ஒரு பகுதி கருகி மோசமான நிலையில் காட்சி அளித்தது.

    இதற்காக தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி திடீர் என்று அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான வெங்கடேஷ் கடந்த 25-ந் தேதி அரியநாயகிபுரத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டுக்கு சென்று அவரை பார்த்து பேசிவிட்டு, வீட்டுக்கு போவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இதனால் வெங்கடேசை அவரது உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஊத்துமலை ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில், வெங்கடேஷ் உடல் மிதந்தது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஊத்துமலை போலீசாரும், ஆலங்குளம் தீயணைப்புபடை வீரர்களும் விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.         
    சேலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் உள்ள  மஞ்சக்கல்பட்டி, சிவா பாலிமேடு இறக்கம் கள்ளுக்கடை பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்புக்கரசி (31). இவர்களுக்கு கனிஷ்கா(4) என்ற  மகள் உள்ளார்.

    செல்வம்-அன்புக்கரசி தம்பதியினர் எடப்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மாமர தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மாலை நேரம் ஆனதும் அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக தெரிகிறது. இதனால் அன்புக்கரசி, அவரிடம் இப்படி மது குடிக்காதீர்கள். தோட்ட வேலையை கவனிங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால், செல்வம் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. பணத்தை  குடித்து செலவழித்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து செல்வம் மது குடித்துவிட்டு வந்து தோட்டத்தை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் வீட்டில் கடந்த 2 நாட்களாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    தினம் தினம் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்புக்கரசி குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மனைவியும், மகளும் காணாததால் செல்வம் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். இன்று ராஜேந்திரன் என்பவருடைய மாமர தோட்டத்தில் உள்ள கிணற்றில் அன்புக்கரசியும், குழந்தை கனிஷ்காவும் பிணமாக மிதந்தனர். அக்கம், பக்கத்தில் வசித்து வருபவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அன்புக்கரசி மற்றும் குழந்தை கனிஷ்கா ஆகியோர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  

    இது பற்றி போலீசார் கூறுகையில், அன்புக்கரசி தனது மகள் கனிஷ்காவை அழைக்குக் கொண்டு மாமர தோட்டத்திற்கு வந்துள்ளார். பின்னர் தனது மகளை தூக்கி நெஞ்சோடு இறுக்கி பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதனால்  தண்ணீரில் மூழ்கி தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.
    ×